இந்த சம்பவம் சீனாவில் ரோபோ டாக்ஸிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எனினும் பாய்டு நிறுவனம் இதுவரையில் இதற்கு விளக்கம் அளிக்கவில்லை.
பாய்டு சீனாவின் மிகப் பெரிய வாகன நிறுவனங்களில் ஒன்று. வுஹான், பெய்ஜிங் மற்றும் சோங்கிங் போன்ற பெரு நகரங்களில் ரோடோ டாக்ஸி சேவையை அளித்து வருகிறது.
சமீபத்தில் உலக அளவில் தங்கள் சேவையை விரிவுபடுத்த முயன்று வருகிறது. அமெரிக்காவில் ஊபர் லிஃப்ட் போன்ற நிறுவங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பாய்டுவுக்கு போட்டி நிறுவனமாக கருதப்படும் pony.ai-ன் கார் ஒன்று பெய்ஜிங்கில் பற்றி எரியும் வீடியோ ஒன்று, மே மாதம் வெளியாகி நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த நிறுவனம், பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்டிருந்த கார் கணினி பிரச்னையால் எரிந்ததாகவும், பயணிகளுக்கு பிரச்னை இல்லை என்றும் விளக்கமளித்தது.

