தோ பாயோவில் ஆபத்தான ஆயுதம் கொண்டு இன்னொருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக சொல்லப்படும் சம்பவத்தில் தொடர்புடைய 49 வயதுமிக்க ஆடவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், HDB குடியிருப்பு புளாக்குகளின் கீழே காவல்துறை அதிகாரிகள், போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இருப்பதைக் காணமுடிந்தது.
நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தோ பாயோ லோரோங் 1ல் உள்ள பிளாக் 168ல் உதவி கோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்ததாக சிங்கப்பூர் ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன.
இதில் ஆபத்தான ஆயுதம் கொண்டு தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக 49 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு பேனாக் கத்தியும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
59 வயதுமிக்க ஆடவர் ஒருவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை கூறின.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் தேசிய தினத்தில் பிறந்த குழந்தை – மகிழ்ச்சியில் பெற்றோர்!
PHOTO: TikTok/Mamusgalibai

