Last Updated:
கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த தீபக், தாயாரின் வங்கி கணக்கில் 1.13 லட்சம் கோடி ரூபாய் இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். வங்கி அதிகாரிகள் கணக்கை முடக்கி விசாரணை நடத்தினர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த 20 வயது நபர் ஒருவர் இறந்து போன தனது அம்மாவின் வங்கி கணக்கிற்கு டெபாசிட் செய்யப்பட்ட தொகை சம்பந்தமான மெசேஜை பெற்றவுடன் அதிர்ச்சி அடைந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த தொகை எந்த அளவிற்கு பெரிய தொகை என்றால், இது இந்த இளைஞரை மட்டும் அல்லாமல் வங்கி அதிகாரிகளையும் வாயடைத்து போக செய்துவிட்டது.
கிரேட்டர் நோய்டா பகுதியில் உள்ள உன்சி டேங்கர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தீபக். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காயத்ரி தேவி என்ற இவருடைய தாயார் இறந்துள்ளார். ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று தன்னுடைய தாயாருக்கு கோடக் மகேந்திரா வங்கியில் இருந்த வங்கி கணக்கை சரி பார்க்கலாம் என்று முடிவு செய்த இவர் அதில் இருந்த தொகையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார். அவருடைய அக்கவுண்டில் 1.13 லட்சம் கோடி ரூபாய் (ரூ. 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) பணம் இருந்துள்ளது.
இத்தனை பூஜ்ஜியங்கள் கொண்ட ஒரு பேங்க் பேலன்ஸை பார்த்த முதல் மாத்திரத்தில் அதை எண்ணுவதற்கு கூட தீபக்கிற்கு தெரியவில்லை. இந்தியாவில் உள்ள பணக்கார செலிபிரிட்டிகள் அக்கவுண்டில் கூட இவ்வளவு பணம் இருக்குமா என்று சொல்ல முடியாது. உதாரணமாக சொல்லப்போனால், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களின் அக்கவுண்டில் இருக்கும் பணத்தைவிட இது 15,000 மடங்கு அதிகமாகும். ஷாருக்கான் உடைய நிகர மதிப்பு 7,438 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி அடைந்த தீபக் உடனடியாக வங்கியில் இருந்து தனக்கு கிடைத்த மெசேஜை தன்னுடைய நண்பர்களுக்கு “பூஜ்ஜியங்களை எண்ணி பாருங்கள்” என்று டைப் செய்து ஃபார்வேர்ட் செய்துள்ளார். இவருடைய இந்த திடீர் அதிர்ஷ்டம் வாட்ஸ்அப் குரூப் மற்றும் சோஷியல் மீடியாவில் ஒரு பேசும் பொருளாக மாறிவிட்டது.
அடுத்த நாள் காலை கோடக் மகேந்திரா வங்கி கிளைக்கு சென்ற தீபக் அங்குள்ள அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கினர். மேலும் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக வருமான வரி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த பணம் வந்த சரியான மூலம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாத ஒரு பணப்பரிமாற்றமாக இருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் சந்திக்கின்றனர்.
இந்த விஷயம் காட்டுத்தீயைப் போல பரவி உடன் சோசியல் மீடியா சேனல்கள், அக்கம் பக்கத்தினர், உள்ளூர் வாசிகள், உறவினர்கள் என்று தீபக்கிற்கு மாறி மாறி போன் செய்து இத குறித்து விசாரித்து வருகின்றனர். போன் கால்களை கையாள முடியாத காரணத்தினால் தீபக் தன்னுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார். அதே சமயத்தில் இன்டர்நெட் இதனை ஒரு சிறந்த மீம் மெட்டீரியலாக மாற்றி உள்ளது.
August 10, 2025 10:57 AM IST
ஷாருக்கான் சொத்து மதிப்பை விட 15 மடங்கு அதிகம்.. வங்கி கணக்கில் இருந்த பணத்தை பார்த்து திகைத்த இளைஞர்


