சிங்கப்பூர் தேசிய தினத்தன்று மேலும் மகிழ்ச்சியூட்டும் விதமாக அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
ஆகஸ்ட் 9ம் தேதி, சிங்கப்பூர் தம்பதிகளான ஆங்கி சியா (Angie Sia) மற்றும் ஜாக்கி ஹு (Jacky Hu) ஆகியோருக்கு ஓர் சிறப்பான நாள் என்று கூறலாம்.
தேசிய தின சிறப்பு TOTO: இந்திய மதிப்பில் 37 கோடி – வென்று மாஸ் காட்டிய அதிஷ்டசாலி நபர்!
நேற்று ஆகஸ்ட் 9, நள்ளிரவு 12:52 மணிக்கு தாம்சன் மருத்துவ நிலையத்தில் இந்த தம்பதி தங்கள் குழந்தை ஜான்ரிக் ஹுவை (Janric Hu) வரவேற்றனர்.
2,780 கிராம் எடையுடன் பிறந்த ஜான்ரிக், இந்தத் தம்பதியினரின் மூன்றாவது மகன் ஆவார். அவர்களுக்கு ஏற்கனவே ஐந்து வயதிலும், ஏழு வயதிலும் இரு மகன்கள் உள்ளனர்.
இதுபற்றி தாம்சன் மருத்துவ நிலையம் கூறுகையில், சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளில் பிறந்த மூன்று குழந்தைகளில் ஜான்ரிக் முதல் குழந்தை என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டது.

