Last Updated:
ரஷ்யாவின் குரில் தீவுகள் அருகே 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சட்கா பகுதியில் 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கடந்த நில நாட்களுக்கு முன் 8 புள்ளி 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுகியதால் மக்கள் அச்சமடைந்தனர். கண்ணாடிகள் உடைந்தன.
இந்த நிலநடுக்கம் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளையும் விடுத்தது. அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கைகளை விடுத்தனர். அதே நேரத்தில் ஹவாய் குறைந்த அளவிலான சுனாமி கண்காணிப்பில் வைக்கப்பட்டது. ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது, நாட்டின் பசிபிக் கடற்கரையை 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரித்திருந்தது.
இதனிடையே, ரஷ்யாவில், கம்சட்காவின் சில பகுதிகளில் 3-4 மீட்டர் (10-13 அடி) உயரமுள்ள சுனாமி பதிவாகியுள்ளதாக, அவசரகால சூழ்நிலைகளுக்கான சூழல் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவின் குரில் தீவுகள் அருகே இந்திய நேரப்படி இன்று இரவு 07.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிந்த நிலையில் தற்போது இன்றும் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
August 09, 2025 9:52 PM IST


