ஒருவேளை வங்கிக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என நினைத்தால், டிஎல்ஆர் (TLR) எனப்படும் டிரிபிள் லாக் ரிசெப்டக்கிள் (Triple Lock Receptacle) என்ற முறையை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதாவது, ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் உள்ள கவுன்டரில் இருந்து TLR கவரைப் பெற்று, நம்மிடம் இருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை போட்டு, அதில் உங்கள் பெயர், முகவரி, டெபாசிட் செய்யும் நோட்டுகளின் மதிப்புகள் போன்ற விவரங்களை நிரப்பி, கவரை மூடிவிட வேண்டும். பின்னர், இதற்கென ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பிரத்யேகமாக இருக்கும் பெட்டியில் போடலாம் அல்லது ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். அதற்கு உங்களுக்கு பேங்க் டிராப்ட் ஆக வந்து சேரும். அதை அருகில் உள்ள வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


