ஓய்வூதியத் திட்டமிடல் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. குறிப்பாக நீங்கள் பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானத்தை விரும்பினால், புத்திசாலித்தனமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு, அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் நல்ல வருமானத்தை வழங்குகின்றன. அதுதான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஆகும். இந்த அரசு ஆதரவு பெற்ற திட்டம், எந்த ஆபத்தும் இல்லாமல் வருமானத்தை வழங்குகிறது. மாதாந்திர வருமானம் விரும்புவோருக்கு இது ஒரு சரியான தேர்வாகும். இருப்பினும், இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. இந்த அஞ்சல் அலுவலக மாதாந்திரத் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?, வருமானம் எப்படி இருக்கும்? என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.


