சிங்கப்பூர் தேசிய தின சிறப்பு TOTO குலுக்கலில் அதிஷ்டசாலி ஒருவர் சுமார் S$5.5 மில்லியன் பரிசை வென்றுள்ளார்.
முதல் பரிசை வென்ற எண்கள் 2, 15, 28, 39, 42, 44 மற்றும் கூடுதல் எண் 5 ஆகும்.
மதுபோதையில் அரை நிர்#வாணமாக படுத்து கிடந்த ஆடவர் – கைது செய்த போலீஸ்
வெற்றி பெற்ற முதல் பரிசுக்கான டிக்கெட் QuickPick Ordinary Entry முறை மூலம் வாங்கப்பட்டது என்று Singapore Pools கூறுகின்றது.
மேலும் டிக்கெட் வாங்கப்பட்ட இடம் ஹாலந்து டிரைவ்வில் உள்ள Block 47 கிளையில் வாங்கப்பட்டதாக அது கூறியுள்ளது.
இரண்டாவது பரிசை 6 பேர் வென்றுள்ளனர், ஒவ்வொரு வெற்றியாளருக்கும் சுமார் S$241,107 என்ற தொகை பிரித்து கொடுக்கப்படும்.

கூடுதலாக, மூன்றாவது பரிசை 422 பேர் வென்றுள்ளனர், இதில் ஆளுக்கு S$1,896 கிடைக்கும்.
ஜூலை 31 அன்று நடந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோட்டோ குலுக்கலின் ஜாக்பாட் பரிசான சுமார் S$12.83 மில்லியன் தொகையை ஒரே ஒருவர் தட்டித் தூக்கினார்.

