Last Updated:
ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திற்கு 5 கேள்விகள் எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, சமீப நாட்களாக தேர்தல் ஆணையம் முறைகேடாக செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். குறிப்பாக மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பெரும் முறைகேடு நடந்ததாகவும், கர்நாடகா நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக கர்நாடகா நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் எடுத்து ஆய்வு செய்ததாகவும், அதில் பெரும் அளவு முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, பெங்களூருவில் ஒற்றை படுக்கை அறை வசதி கொண்ட வீட்டின் முகவரியில் 80 வாக்காளர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆய்வில் அங்கு யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், பாஜகவின் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு விவகாரத்தில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக தனது கையொப்பமிட்ட உறுதிமொழி பத்திரத்தை அளிக்க வேண்டும் அல்லது பொய் குற்றச்சாட்டுகள் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்று ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இந்த விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். மேலும், தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் ஆணையத்திற்கு ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் ஆணையத்திற்கு 5 கேள்விகள் உள்ளன – நாடு அதற்கான பதில்களைக் கேட்கிறது:
चुनाव आयोग, 5 सवाल हैं – देश जवाब चाहता है:
1. विपक्ष को डिजिटल वोटर लिस्ट क्यों नहीं मिल रही? क्या छिपा रहे हो?
2. CCTV और वीडियो सबूत मिटाए जा रहे हैं – क्यों? किसके कहने पर?
3. फर्जी वोटिंग और वोटर लिस्ट में गड़बड़ी की गई – क्यों?
4. विपक्षी नेताओं को धमकाना, डराना – क्यों?… pic.twitter.com/P0Wf4nh5hc
— Rahul Gandhi (@RahulGandhi) August 8, 2025
- ஏன் எதிர்க்கட்சிகளுக்கு டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை? நீங்கள் எதனை மறைக்கிறீர்கள்?
- சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன அது ஏன்? யாரின் உத்தரவில் அது நடக்கிறது?
- போலி வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருக்கிறது அது ஏன்?
- எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் ஏன்?
- பாஜகவின் முகவராக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? எங்களுக்கு தெளிவாக சொல்லுங்கள்.
இந்தியாவின் ஜனநாயகம் விலைமதிப்பற்றது – அதனை திருடினால் விளைவுகள் மோசமாக இருக்கும். தற்போது பொதுமக்களே இது குறித்து பேசுகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.
August 08, 2025 5:09 PM IST


