• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டிரம்ப் வரி விதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் புதின் – அஜீத் தோவல் சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
டிரம்ப் வரி விதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் புதின் – அஜீத் தோவல் சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆண்டு இறுதியில் புதின் இந்தியா வருகை

இதற்கிடையே, இந்தியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரஷியா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா். புதின் வருகைக்கான தேதியை இரு தரப்பினரும் முன்கூட்டியே இறுதி செய்து வருவதாகவும், செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வருவதற்காதான தேதிகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இரு தரப்பினரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதனை உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு இறுதியில் புதின் இந்தியா வருவாா் எனத் தெரிகிறது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபா் புதினை தோவல் சந்தித்தார். புதின் தோவலை கைக்குலுக்கி வரவேற்றார்.

இருவரது சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தியாவுக்கு மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைவில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தோவல் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் ரஷியாவிற்கும் இடையே நீண்டகால உறவு இருப்பதாகவும், இந்த உறவை மதிப்பதாக தெரிவித்த தோவல், புதின் வருகை குறித்த தகவல் அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உச்சி மாநாடு அளவிலான சந்திப்புகள் எப்போதும் உறவுக்கான திருப்புமுனைப் புள்ளிகளாக அமைந்துள்ளன,” என்று கூறினார்.

டிசம்பர் 2021-க்குப் பிறகு புதின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும், மேலும் மேற்கத்திய கூட்டாளிகளின் அழுத்தத்தை மீறி இந்தியா ரஷியாவுடன் வலுவான பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறை மேம்பாடு உறவுகளைத் தொடர்ந்து பராமரித்து வரும் நேரத்தில் இது சந்திப்பு நிகழ்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து மாஸ்கோவிற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலின் முதல் சந்திப்பு இதுவாகும். கடைசியாக ஜூன் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தின் போது ரஷிய அதிகாரிகளைச் சந்தித்தார்.

கடந்த ஆண்டில் மட்டும் பிரதமா் மோடி இருமுறை ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.

Read More

Previous Post

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

Next Post

உலக பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது வேலம்மாள் வித்யாலயா | Velammal School takes gold at 2025 World Schools Team Championship

Next Post
உலக பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது வேலம்மாள் வித்யாலயா | Velammal School takes gold at 2025 World Schools Team Championship

உலக பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது வேலம்மாள் வித்யாலயா | Velammal School takes gold at 2025 World Schools Team Championship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin