• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் | Russian President Vladimir Putin is coming to India

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் | Russian President Vladimir Putin is coming to India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் இந்​தாண்டு இந்​தியா வரு​கிறார் என மாஸ்​கோ​வில் அளித்த பேட்​டி​யில் இந்​தி​யா​வின் தேசிய பாதுகாப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறி​யுள்​ளார். இந்​தியா – ரஷ்யா இடையே ராணுவ உறவு​களை விரி​வாக்​கும் நோக்​கில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்யா சென்​றுள்​ளார்.

அவர் அதிபர் புதினை நேற்று சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்தி​னார். அதன்​பின் அவர் இன்​டர்ஃபேக்ஸ் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில்,” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தாண்டு இந்​தியா வரு​கிறார் ” என கூறி​னார்.

ரஷ்யா – உக்​ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் ஏற்​பட்ட பின் ரஷ்ய அதிபர் புதின் முதல் முறை​யாக இந்​தியா வரவுள்ளார். கடந்​தாண்டு ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி இரு முறை சந்​தித்​தார். கடந்​தாண்டு ஜூலை மாதம் இந்​தியா – ரஷ்யா இடையே​யான 22-வது ஆண்டு கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி ரஷ்யா சென்​றார்.

இது பிரதமர் மோடி 3-வது முறை​யாக பதவி​யேற்​றபின் முதல் முறை​யாக ரஷ்​யா​வுக்கு சென்ற பயண​மாகும். அப்​போது பிரதமர் மோடிக்கு ரஷ்​யா​வின் உயர்ந்த விரு​தான ‘ஆர்​டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு தி அபோஸ்​டில்’ விருது அளித்து கவுரவிக்​கப்​பட்​டது. இந்​தியா – ரஷ்யா இடைய​யான உறவை வலுப்​படுத்த பிரதமர் மோடி மேற்​கொண்ட முயற்​சிகளை பாராட்டி இந்த விருது அளிக்கப்​பட்​டது.

அதன்​பின் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்​யா​வின் காசன் நகருக்கு கடந்​தாண்டு அக்​டோபர் மாதம் பிரதமர் மோடி சென்​றார். அப்​போதும் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்​தித்​தார். தற்​போது ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்​தர​விட்​டுள்​ளார்.

அதோடு, உக்​ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்​தா​விடில், அந்​நாட்​டிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் நாடு​கள் மீது இரண்டாம் கட்ட பொருளா​தார தடை விதிக்​கப்​படும் எனவும் அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதின், இந்​தியா வரு​கிறார் என்ற அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது.

ரஷ்யா – உக்​ரைன் இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படு​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு இன்​றுடன் முடிவடைகிறது. இந் நிலை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், ரஷ்யா சென்று அதிபர் புதினை சந்​தித்து பேசி​னார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்​டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்​புவ​தாக அவர் அதிபர் புதினிடம் தெரிவித்​தார்.

இந்​நிலை​யில் ரஷ்​யா​வின் கிரெம்​ளின் மாளிகை வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், அதிபர் புதின், விரை​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​திப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது என தெரி​வித்​துள்​ளது. இதை ரஷ்ய வெளி​யுறவுத்​துறை ஆலோ​சகர் யூரி உஷாகோ​வும் உறுதி செய்​துள்​ளார். இந்த சந்​திப்​பிற்​கான இடம், ஏற்​பாடு​கள்​ குறித்​த அறி​விப்​பு விரை​வில்​ அறிவிக்​கப்​படும்​ என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டேன்: மனம் திறக்கும் கிறிஸ் வோக்ஸ் | I apologized to Rishabh Pant: Chris Woakes

Next Post

Pantai Dalamமில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 குடிசை வீடுகள், Mydin Mart உள்பட 4 வணிக வளாகங்கள் அழிந்தன | Makkal Osai

Next Post
Pantai Dalamமில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 குடிசை வீடுகள், Mydin Mart உள்பட 4 வணிக வளாகங்கள் அழிந்தன | Makkal Osai

Pantai Dalamமில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 குடிசை வீடுகள், Mydin Mart உள்பட 4 வணிக வளாகங்கள் அழிந்தன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin