• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உலகில் அதிகம் கையாளும் 2-வது துறைமுகம்! | 2nd busiest port in the world

GenevaTimes by GenevaTimes
August 7, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உலகில் அதிகம் கையாளும் 2-வது துறைமுகம்! | 2nd busiest port in the world
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கப்பல்களை நிறுத்​திவைக்​கவும், சரக்​குப் பொருள்களை ஏற்றி இறக்​கவும் சேவை​களை​யும் வசதி​களை​யும் வழங்​கும் சிங்​கப்​பூர் துறைமுகம், சிங்​கப்​பூரின் பொருளாதா​ரத்​துக்​கும் வளர்ச்​சிக்​கும் முக்​கியமான பங்களிப்​பைச் செய்​து​வரு​கிறது. ஒரு சிறிய நகரமாக இருந்த காலத்​தில் ஆற்றங்​கரையில் ஒரு துறைமுகத்​துடன் சிங்​கப்​பூர் இயங்​கிக்​ கொண்டிருந்தது.

இன்றைக்கு உலகில் உள்ள பல்வேறு துறைமுகங்​களு​டனான இணைப்​பைக் கொண்​டிருக்​கும் அளவுக்கு அது மிகப் பிரம்​மாண்​ட​மானதாக விரிவடைந்​திருக்​கிறது. இன்றைக்கு அதிகமான சரக்​குப் பெட்டகங்​களைக் கையாளுகின்ற, தொடர்ச்​சி​யான, முழு​மையான பயன்​பாட்டில் உள்ள உலகின் இரண்​டாவது துறைமுகமாக சிங்​கப்​பூர் துறைமுகம் வளர்ந்​திருக்​கிறது.

சுதந்​திரத்​துக்​குப் பிறகு… – 1960களி​லும், 1970களி​லும் சிங்​கப்​பூர் வேகமாகத் தொழில்​மய​மாகிக்​கொண்​டிருந்த காலகட்டத்​தில், அதன் துறைமுகமும் துரிதகதி​யில் வளர்ச்​சி​யடைந்​தது. 1965இல் தொடங்​கப்​பட்ட ஜூரோங் துறைமுகம், தொழில்​மய​மாகிக்​கொண்​டிருந்த ஜூரோங் நகர வளர்ச்​சித் திட்டத்​தின் அடிப்படை அம்சமாக விளங்​கியது.

ஜூரோங் தொழில்​துறை எஸ்டேட்டில் இயங்​கிவரும் தொழிற்​சாலைகளுக்​குத் தேவையான சரக்​கு​களைக் கையாள்​வதற்காக இந்தத் துறைமுகம் தொடங்​கப்​பட்டது. 1971இல், பிரிட்டனின் கடற்​படைத் தளத்தை வாங்கிய சிங்​கப்​பூர் துறைமுக ஆணையம் (PSA) அதை செம்​பவாங் படகுத்​துறையாக மாற்றியது. 1974இல், பாசிர் பாஞ்​சாங் படகுத் துறை செயல்​படத் தொடங்​கியது.

1960களின் இறுதி​யில், பல மில்​லியன் டாலர் முதலீட்டில், தென்​கிழக்கு ஆசியாவின் முதல் சரக்​குப்​பெட்டக முனையத்தை சிங்​கப்​பூர் துறைமுக ஆணையம் உருவாக்​கியது. அந்தக் காலகட்டத்​தில் சரக்​குப் பெட்டகப்பரிவர்த்​தனை​யின் நிலவரம் என்ன என்பது தெளிவில்​லாமல் இருந்​தது. ஏனெனில், ஐரோப்​பாவுக்​கும் தென்​கிழக்கு ஆசியா​வுக்​கும் இடையில் சென்​று​வரும் சரக்​குக் கப்பல்களை உருவாக்க எந்தக் கப்பல் நிறு​வனமும் முன்​வர​வில்லை.

1972ஆம் ஆண்டு மூன்று சரக்​குப்​பெட்டக நிறுத்​துமிடங்​களு​டன், தஞ்சோங் பாகர் சரக்​குப்​பெட்டக முனையம் திறக்​கப்பட்டது. முதன்​முதலாக, எம்.வி. நிஹான் என்னும் சரக்​குக் கப்பல் 24 ஜூன் 1972 அன்று இந்த முனையத்​துக்கு வந்தது. சரக்​குக் கப்பல் போக்​கு​வரத்து வளர்ச்சி ஆரம்​பத்​தில் மெது​வாகவே இருந்​தது. ஆனால் 1980களில், சரக்​குப் பெட்டகங்​களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்​தது.

இதனால், தேவையைச் சமாளிக்க அதிகமான சரக்​குக் கப்பல் நிறுத்​து​மிடங்களை உருவாக்க வேண்​டி​யிருந்​தது. துறைமுகங்​களுக்கு வரும் சரக்​குக் கப்பல்கள் அதிகரித்த நிலை​யில், அது தொடர்புடைய வணிகங்​களின் தேவை​களைப் பூர்த்​தி செய்ய கணினிமய​மாக்கல் நடைமுறைப்​படுத்​தப்​பட்டது.

1990களில், துறைமுகத்​தின் பல்வேறு வசதிகள் விரிவுபடுத்​தப்​பட்டன. துறைமுகத்​தின் திறன்களை மேம்​படுத்​தும் பணிகளும் முடுக்​கிவிடப்​பட்டன. புதிய பிரானி முனையத்​தில் கப்பல் நிறுத்​து​மிடங்களை அதிகரிப்பது, தஞ்சங் பாகர் சரக்​குப் பெட்டக முனையத்​தின் வளர்ச்​சிப் பணிகள், அதிகரித்​து​வந்த மொத்த சரக்​கு​களைக் கையாள ஜூரோங் துறைமுகத்​தின் திறனை அதிகரித்தல் போன்றவை இதில் அடங்​கும். 1996ஆம் ஆண்டில், சிங்​கப்​பூர் துறைமுக ஆணையத்​தின் துறைமுக ஒழுங்​குமுறைச் செயல்​பாடுகள் சிங்​கப்​பூர் கடல்​சார் – துறைமுக ஆணையத்​தால் கையகப்​படுத்​தப்​பட்டன.

1997இல் நிறு​வனமய​மாக்​கப்​பட்ட சிங்​கப்​பூர் துறைமுக ஆணையம், அதன் பின்னர் சிங்​கப்​பூர் துறைமுக ஆணைய கார்ப்​பரேஷன் லிமிடெட் என்று அழைக்​கப்​படு​கிறது. ஜூரோங் துறைமுகத்​தைத் தவிர, மற்றவற்றை இன்றும் இந்நிறு​வனம் நிர்​வகித்து, இயக்​கு​கிறது.பல நாடுகளில் உள்ள பல்வேறு துறைமுகங்களுடன் சிங்​கப்​பூர் துறைமுகம் இணைக்​கப்​பட்டுள்​ளது. ஏராளமான கப்பல்கள் இத்துறைமுகத்​துக்கு வந்துசெல்​கின்றன. கப்பல் துறை​யில், மாறிவரும் தேவை​களைப் பூர்த்தி செய்ய, நவீனத் தொழில்​நுட்​பங்கள் கொண்ட இரண்டு புதிய பாசிர் பாஞ்​சாங் சரக்​குப்​பெட்டக முனையங்கள் 2000ஆம் ஆண்டில் திறக்​கப்​பட்டன.

ஆளில்​லாப் பளுத்​தூக்​கி​கள், தானியங்​கிச் சரக்​குப் பெட்டகக் கட்டுமான இடம் போன்​றவற்றில் சிங்​கப்​பூர் துறைமுக ஆணையம் பெரு​மளவில் முதலீடு செய்​தது. அதே ஆண்டில், துவாஸ் பகுதி​யில் உள்ள அனைத்து சரக்​குப்​பெட்டக முனையங்​களை​யும் ஒற்றைப் பெரிய துறைமுகமாக இணைப்பது என்ற அதி​காரபூர்​வமாக முடிவெடுக்​கப்​பட்டது. படிப்​படி​யாகச் செயல்​படுத்​தப்​பட்டுவரும் இத்​திட்டம், சிங்​கப்​பூர் துறைமுகத்​தின் வளர்ச்​சி​யில் ஒரு புதிய பரிணா​மமாகக்​ கருத​ப்​படு​கிறது.



Read More

Previous Post

தடைகேட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு.. அதிரடியாக தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! | இந்தியா

Next Post

காசாவை முழுமையாக ‘கைப்பற்ற’ இஸ்ரேல் திட்டம் – எப்படி நடக்கும் இந்த ‘ஆக்கிரமிப்பு’? | Will Israel fully reoccupy Gaza? – The support and opposition for Netanyahu

Next Post
காசாவை முழுமையாக ‘கைப்பற்ற’ இஸ்ரேல் திட்டம் – எப்படி நடக்கும் இந்த ‘ஆக்கிரமிப்பு’? | Will Israel fully reoccupy Gaza? – The support and opposition for Netanyahu

காசாவை முழுமையாக ‘கைப்பற்ற’ இஸ்ரேல் திட்டம் - எப்படி நடக்கும் இந்த ‘ஆக்கிரமிப்பு’? | Will Israel fully reoccupy Gaza? - The support and opposition for Netanyahu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin