Last Updated:
நெருக்கமான ஒரு மூத்த அதிகாரி, தன் மகள் திருமணத்தில் 400 கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருட்கள் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் குறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உயர் அதிகாரிகள் பலர் ஊழல்வாதிகள் என்றும் அவர்கள் போர்ச்சுக்கல் நாட்டில் குடியுரிமை பெற முயற்சி செய்வதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியல்வாதிகள் மட்டும் அனைத்து பழிகளுக்கும் ஆளாவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் ஊழல் மூலம் பெரும் செல்வத்தை சேர்த்துள்ளதாகவும், குறிப்பாக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் உஸ்மான் புஸ்தாருக்கு நெருக்கமான ஒரு மூத்த அதிகாரி, தன் மகள் திருமணத்தில் 400 கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருட்கள் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் உயரதிகாரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கருப்பு பணத்தை பயன்படுத்தி போர்ச்சுக்கல் நாட்டில் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகவும், அந்நாட்டிற்கு தப்பியோடும் நோக்கில் குடியுரிமை பெற முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிகாரிகளின் செயல்கள் வெட்கக்கேடானது என்று கூறியுள்ள கவாஜா ஆசிப், இத்தகைய அதிகாரிகளால் பாகிஸ்தான் நிலம் கறைபடிந்துவிட்டதாகவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதால் வெளிநாட்டில் குடியுரிமையோ அல்லது குடியிருப்புகளையோ வாங்க முடியவில்லை என்றும் ஆசிப் தெரிவித்துள்ளார்.
August 07, 2025 3:23 PM IST
பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் குறித்து அதிர்ச்சி தகவல்.. பரபரப்பை கிளப்பிய பாக். அமைச்சர் ஆசிப் கவாஜா!


