பொங்கோலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீயால் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஃபேஸ்புக் பதிவில் கூறியதாவது; நேற்று ஆக. 6 ஆம் தேதி மாலை 7 மணியளவில் தீ குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
சிங்கப்பூரில் தூங்கி ஓய்வெடுக்க S$3000 சம்பளம்: “சும்மா இருந்தா போதும்” – உடனே விண்ணப்பியுங்கள்!
புங்கோல் ஃபீல்ட் வாக் பிளாக் 19ன் 16வது மாடியில் உள்ள வீட்டில் தீ ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் இருந்த நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் கண்டனர், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.
மேலும் தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மூலம் தீ அணைக்கப்பட்டதாக SCDF கூறியது.
அந்த நான்கு பேரும் சுயநினைவுடன் இருந்தனர், அதில் இருவர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும், ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். நான்காவது நபர் மருத்துவமனைக்கு செல்லவில்லை.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாக்கில் இருந்து சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.
சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய செயல்முறை: பயணத் தடையும் விதிக்கப்படலாம்!
PHOTO: SCDF/Facebook
The post பொங்கோலில் தீ: 100 பேர் வெளியேற்றம் – 3 பேர் மருத்துவமனையில்… appeared first on Tamil Daily Singapore.

