இதனைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க முறைப்படி தன் மகனுக்கு திருமணத்தை நடத்தியிருக்கிறார்.
அது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் நெப்போலியன், “அமெரிக்க முறை திருமணம். அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்.
உங்களின் அன்போடும் ஆசீர்வாதத்துடனும், அமெரிக்க அரசின் திருமண அனுமதி பெற்று, நேஷ்வில்லில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில், நேஷ்வில் ஶ்ரீ கணேஷ் கோவிலின் மூத்த குருக்களின் வாழ்த்துகளோடு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில், அமெரிக்க முறைப்படி, எங்கள் மகன் தனுஷுக்கும் அக்ஷயாவிற்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.
உங்களின் மேலான பார்வைக்கும், உங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல கோடி!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இந்த திருமணத்திற்கு திரைத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

