புத்ராஜெயா:
தேசிய உயர்கல்வி நிதி திட்டமான PTPTN தனது ஸியாரா காசி சிம்பான் SSPN திட்டத்தின் வாயிலாக SSPN சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தியவரான காலஞ்சென்ற பூவன் த/பெ ஆறுமுகத்தின் வாரிசுகளை பிரெசின்ட் 11, புத்ராஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். 52 வயதான அரசு ஊழியரான பூவன் கடந்த ஜூன் 25, 2025 அன்று மரணமடைந்தார்.


தகாபுல் நலத் திட்டத்தின் வாயிலாக அவரது குடும்ப சுமையை குறைக்கும் வாய்ப்பு கிடைத்தது. உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் பிரெசின்ட் 11இல் உள்ள பூவனின் இல்லத்திற்குச் சென்று, அவரது மனைவி வி. சிவகாமிக்கு (48) ஆறுதல் கூறினார். அவர், தகாபுல் பாதுகாப்பு மரண Œகாய நிதிக்கான அதிகாரபூர்வ பத்திரத்தையும் காப்புறுதி நலத்தொகை குறிப்பிடப்பட்ட மாதிரி காசோலையையும் பூவன் குடும்பத்துக்கு ஒப்படைத்தார்.
PTPTN தலைவர் டத்தோ’ ஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம், PTPTN தலைமை செயல் அதிகாரி அகமட் தசூகி அப்துல் மஜித், உயர்கல்வி தலைமைத்துவ கழக இயக்குநர் (AKPET) டாக்டர் ஹர்ஷிதா ஐனி பிந்தி ஹருன், PTPTNஉயர் நிர்வாக குழுவினர் உள்ளிட்டோரும் இந்த வருகையில் இடம்பெற்றிருந்தனர்


மறைந்த பூவன் SSPN PRIME கணக்கில் தனக்கும் தனது மூன்று பிள்ளைகளுக்காக பணம் சேமித்திருந்தார். இதன் மூலம் RM1,822.56 தகாபுல் நலத் தொகையும், RM3,000 இறப்பு நிதியும் பெறப்பட்டன. மொத்தமாக SSPN PRIME வாயிலாக RM4,822.56 பெறப்பட்டது.
அத்துடன், SSPN PLUS வாயிலாக அவர் TOPAZ கணக்கையும் வைத்திருந்தார். ஒரு பிள்ளைக்காக மாதம் RM 100 (RM90 சேமிப்பு + RM10 Takaful) மற்ற இரண்டு பிள்ளைகளுக்காக RM50 (DELIMA திட்டம்: RM40 சேமிப்பு + RM10 Takaful) செலுத்தி வந்தார்.

இந்த SSPN PLUS கணக்கில் RM90,000 தகாபுல் நலத்தொகையும் RM9,000 இறப்புத் தொகையும் வழங்கப்பட்டது. SSPN PLUS வாயிலாக மொத்தம்: RM99,000 SSPN PLUS உடன் சேர்த்து, மொத்த நலன்: RM103,822.56 வழங்கப்பட்டது.
SSPN சேமிப்பு கணக்கில்என் கணவர் நிலையான முறையில் பணம் சேமித்ததின் பயனாக, எங்கள் 18, 15, 10 வயதுடைய மூன்று பிள்ளைகளின் கல்விக்கும், குடும்பத்திற்கும் இது ஒரு பெரிய உறுதுணையாக அமைந்திருக்கிறது என்று சிவகாமி கூறினார்.
SSPN சேமிப்பு திட்டங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, PTPTN இணையதளத்தில் (www.ptptn.gov.my) அல்லது myPTPTN செயலியை பயன்படுத்த மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது எளிதானதும், துரிதமானதும், பாதுகாப்பானதுமாகும்.
PTPTN இன் இரண்டு சேமிப்பு திட்டங்களான SSPN Prime, SSPN PLUS திட்டங்களின் நன்மைகள்:
ஆண்டு ஒன்றுக்கு வருமான வரி விலக்கு & & RM8,000 வரை தகாபுல் பாதுகாப்பு (மக்களுக்கு இலவசமாக) தகுதி உள்ள குடும்பத்திற்கு புதிதாக வழங்கப்படும் RM10,000 வரையிலான சேமிப்பு மானியம் (GERAN SEPADAN) அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய ஆற்றல் வாய்ந்த ஷரியா, டிவிடன் தொகை சேமிப்பு.
SSPN PLUS வழங்கும் விருப்பப்பட்டுத் தேர்வு செய்யக்கூடிய 6 திட்டங்கள்: இந்தான் திட்டம் வாயிலாக மாதாந்திரத்திற்கு RM30 முதல் RM500 (பெர்லியான் திட்டத்தின்) வாயிலாக RM1.2 மில்லியன் வரை (தகாபுல் நிறுவனத்தின் விதிமுறைகள் பொருந்தும்) மரண நிதி, தீவிர நோய் நலத்தொகை & RM200,000 வரை மருத்துவ மருத்துவமனை அனுமதிக்கான படியளவு தொகை இத்திட்டத்தில் உள்ளடக்கம்.




