கோலாலம்பூர்,
நாட்டின் இராணுவ உள்துறை உபகரணங்களை மேம்படுத்தும் திட்டம் தொடர்பான விவகாரங்கள், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ராயல் மலேசியா ஏர்போர்ஸ் (RMAF) தலைமை தளபதி ஜெனரல் டத்தோ ஸ்ரீ முகமது நோராஸ்லான் அரீஸ் இடையிலான சந்திப்பின் போது இன்று பெர்டானா புத்ராவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில், நாட்டின் வான்வழி பாதுகாப்பின் தயார்நிலை மற்றும் அதிகரித்து வரும் சவாலான பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவை முக்கியமாக பேசப்பட்டன.
இது குறித்து “நமது நாட்டின் பாதுகாப்பையும், முழு இறையாட்சி உரிமையையும் உறுதியாக காக்க, மடானி அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி, தேவையான ஆதரவை வழங்கும்,” என பிரதமர் தனது facebook பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
மேலும், முகமது நோராஸ்லானின் தலைமையில், ராயல் மலேசியா ஏர்போர்ஸ் மண்டலத்தில் மதிப்பிடப்பட்ட படையணியாக தொடர வேண்டும் என்ற நம்பிக்கையை பிரதமர் தெரிவித்தார்.
ஜெனரல் முகமது நோராஸ்லான் அரீஸ், கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஓய்வுபெற்ற ஜெனரல் தன் ஸ்ரீ முகமட் அஸ்கர் கான் கொரிமான் கானுக்கு பதிலாக 21வது விமானப்படை தலைவராக நியமிக்கப்பட்டார்.




