Last Updated:
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் மாணவர்கள் போராட்டம் வெடித்த நிலையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து முகமது யூனுஸை தலைமை ஆலோசகராகக் கொண்டு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் முகமது யூனுஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தேசிய அளவிலான பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரமலானுக்கு முன்னதாக நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறினார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி ரமலான் துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பு பொதுத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டு அதன் தலைவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
August 06, 2025 3:37 PM IST


