தெம்பனீஸ் அவென்யூ 2 மற்றும் தெம்பனீஸ் அவென்யூ 7 சந்திப்பிற்கு அருகே இரண்டு டபுள் டெக்கர் பேருந்துகள் மற்றும் கார் மோதிய சம்பவத்தில் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 10:15 மணியளவில் Temasek ஜூனியர் கல்லூரிக்கு அருகில் நடந்தது.
சிங்கப்பூரில் தூங்கி ஓய்வெடுக்க S$3000 சம்பளம்: “சும்மா இருந்தா போதும்” – உடனே விண்ணப்பியுங்கள்!
முதல் நாள் வேலைக்கு வந்த கார் ஓட்டுநர்
தன் வேலையை ஏற்றுக்கொண்டு முதல் நாள் பணிக்கு வந்தேன், ஆனால் அது விபத்தாக மாறியது என்று தனியார் வாடகைக் கார் ஓட்டுநர் ஷின் மினிடம் கூறினார்.
“பின்புறத்தில் கடுமையாக மோதிய தாக்கம் மட்டுமே எனக்குப் தெரிந்தது. என்ன நடக்கிறது என்பதை நான் உணரவில்லை,” என்று ஓட்டுநர் கூறினார்.
இந்த சம்பவத்தில் காரின் பின்புறம் சேதமடைந்தது, மேலும் SBS பேருந்துகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன.
69 வயதுடைய பேருந்து ஓட்டுநர் மற்றும் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட பேருந்து பயணிகள் 12 பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என SPF செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதாவது, ஐந்து பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கும், எட்டு பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத உச்சம்!
PHOTO: Shin Min Daily News

