தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) ) காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எதுவும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) வாக்களிப்பில் நடுநிலை வகித்திருந்தார்.
குறித்த விடயம் பெரும் பேசுபொருளாக மாறி உள்ள நிலையில் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் விளக்கமளித்துள்ளார்.
மேலும் அவர் விரிவாக தெரிவித்த விடயங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்.

