13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (11) பிற்பகல் மற்றும் இரவு வேளையில் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அமுலாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியம் காணப்படுவதால், மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காலநிலை அதிகாரிகள் மக்களை கோருகின்றனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என சுட்டிக்காட்டப்படுகிறது
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

&w=1200&resize=1200,675&ssl=1)