ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுப்போம். மனையில்லாதவருக்கும் வீடு கொடுப்போம். ஏழை என்ற சொல் இல்லை என்று உருவாக்கிக் காட்டுவோம். நான் ஆட்சி ஏற்றதும் வறட்சி, புயல், கொரோனா காலத்திலும் நல்ல ஆட்சியை கொடுத்தோம். இன்று கொரோனா, புயல் என்று எதுவுமே இல்லை. ஆனால் நம்மை கடன்காரராக மாற்றிவிட்டார் ஸ்டாலின். தமிழகத்தை ஆண்ட அத்தனை அரசுகளின் கடனை விட திமுக அரசின் கடன் அதிகம். 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை. கடன் வாங்குகிறீர்கள்… ஆனால், என்ன திட்டம் கொடுத்தீர்கள்? அதிமுக ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் கொண்டுவந்தோம், நீங்க என்ன கொண்டுவந்தீர்கள்? ஆனால், கடன் மட்டும் அதிகரித்து மாயாஜால அரசு மாதிரி தெரிகிறது..

