வட்டி விகிதம் மற்றும் வருமானம்:இந்தத் திட்டத்தில் தற்போது (2024 அக்டோபர்-டிசம்பர் காலாண்டு வரை) ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டு, முதலீடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் நிறைவடைந்தவுடன் வழங்கப்படும். உதாரணமாக, நீங்கள் ரூ. 9 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ. 5,550 வட்டி வருமானமாகப் பெறலாம்.இந்த வட்டி வருமானமானது உங்கள் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டு ஆகும். முதிர்வடைந்த பிறகு, அசல் தொகையை முழுமையாகத் திரும்பப் பெறலாம்.


