• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது” – பிரியங்கா காந்தி எம்பி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது” – பிரியங்கா காந்தி எம்பி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அந்தவகையில், இந்தியா – சீனா எல்லையில் இருக்கும் அருணாச்சல் பிரதேசத்தில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகவும், இந்திய ராணுவ வீரர்கள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து அவர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், இது அரசியல் உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என முறையிட்டார். ஆனால், ராகுல் காந்தியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மஷி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சீனா, இந்தியாவின் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டது உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோல் பேசமாட்டீர்கள். நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா?” என கேள்வி எழுப்பினர்.

இதற்கு ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர், அபிஷேக் சிங்வி, “இவற்றைக் கூட சொல்ல முடியவில்லை என்றால், பிறகு எப்படி அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும்?” என தனது வாதத்தை முன்வைத்தார்.

அப்போது நீதிபதி தீபங்கர் தத்தா, “இதுபோன்ற விஷயங்கள் நீங்கள் ஏன் நாடாளுமன்றத்தில் சொல்வதில்லை?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தியின் சிறப்பு விடுப்பு மனு மீது பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி மீது மூன்று வாரத்திற்கு கீழமை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது.

இது தொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. ராகுல் காந்தி, நமது ராணுவம், ராணுவ வீரர்கள் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளார்.

#WATCH | Congress MP Priyanka Gandhi Vadra says, “With all due respect to the judiciary, it is not for them to determine who is a true Indian and who is not. The judges will not decide that. Rahul Gandhi has always respected the army and our soldiers… The LoP’s responsibility… pic.twitter.com/72Ru2gXbVW


— ANI (@ANI) August 5, 2025

அரசை நோக்கி கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சி தலைவரின் பொறுப்பு. அதனைத் தான் அவர் செய்தார். அரசாங்கத்திற்கு அது பிடிக்கவில்லை, அவருக்குப் பதில் சொல்லவும் அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் இந்த தந்திரங்களை எல்லாம் பயன்படுத்துகிறார்கள்.

நாடாளுமன்றத்தை நடத்தக்கூட முடியாத அளவுக்கு அவர்கள் பலவீனமாகிவிட்டார்களா? அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு தலைப்பை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. ஆனால் அவர்களால் அதன் மீது விவாதம் நடத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 05, 2025 5:11 PM IST

Read More

Previous Post

கறிக்குழம்பு சட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

Next Post

சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு புதிய பொறுப்பு… ரூ.1140 கோடி திட்டத்தில் முக்கிய ரோல்! | விளையாட்டு

Next Post
சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு புதிய பொறுப்பு… ரூ.1140 கோடி திட்டத்தில் முக்கிய ரோல்! | விளையாட்டு

சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு புதிய பொறுப்பு... ரூ.1140 கோடி திட்டத்தில் முக்கிய ரோல்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin