• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாரீஸ் நகரத்தை போல சீனாவில் இருக்கும் ஓர் அடடே கிராமம்! – எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
பாரீஸ் நகரத்தை போல சீனாவில் இருக்கும் ஓர் அடடே கிராமம்! – எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவில் பாரீஸ் நகரத்தை போலவே ஒரு இடம் இருப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? சீனாவில் அமைந்துள்ள தியாண்டுசெங் கிராமம், பாரீஸின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம், பிரான்ஸின் தலைநகரான பாரீஸைப் போலவே இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சமே 108 மீட்டர் உயரமுள்ள ஈபிள் கோபுரத்தின் மாதிரி தான், பாரீஸின் அடையாளமாக சீனாவிலும் உள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய ஈபிள் கோபுர பிரதியாகும். பாரீஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ், வெர்சாய்ஸ் தோட்டங்கள் மற்றும் பரோக் நீரூற்றுகள் என பாரீஸின் சில முக்கிய அம்சங்களை இந்த கிராமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் 10,000 பேர் வசிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த கிராமம், குறைந்த மக்கள் தொகையால் “பேய் நகரம்” என்று அழைக்கப்பட்டது.

2013இல் 2,000 பேர் மட்டுமே வசித்தனர். ஆனால் 2017ஆம் ஆண்டு மக்கள் தொகை 30,000 ஆக உயர்ந்தது. இருந்தாலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கடைகள் இன்னும் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், இந்த கிராமம் ஹாங்ஸோவின் மையப்பகுதியிலிருந்து 40 நிமிட தொலைவில், பொது போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதியில் அமைந்திருப்பது தான்.

தியாண்டுசெங் கிராமம், சீன மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக திருமண புகைப்படங்களுக்கு இது பிரபலமாக உள்ளது. இங்கு உள்ள உணவு விடுதிகளில் பிரெஞ்சு உணவுகளுக்கு பதிலாக சீன உணவு வகைகளே பரிமாறப்படுகின்றன.

இந்த கிராமம், சீனாவின் “டூபிளிடெக்சர்” (duplitecture) போக்கின் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற இடங்களைப் பிரதியெடுக்கும் முயற்சியை பிரதிபலிக்கிறது. அசல் பாரீஸ் அனுபவத்தை இந்த இடம் முழுமையாக வழங்க முடியவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

கோனோமா: பூட்டும் இல்லை.. திருட்டும் இல்லை.. இந்தியாவின் தனித்துவமான கிராமம் பற்றி தெரியுமா?

Read More

Previous Post

அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது இந்தியா: 4 சரக்கு கப்பல்கள் குஜராத் வந்தன | India buys crude oil from Russia despite US pressure

Next Post

SARA நிதி உதவியைக் குறிவைக்கும் மோசடி கும்பல்கள்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை | Makkal Osai

Next Post
SARA நிதி உதவியைக் குறிவைக்கும் மோசடி கும்பல்கள்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை | Makkal Osai

SARA நிதி உதவியைக் குறிவைக்கும் மோசடி கும்பல்கள்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin