யுஷூனில் கார் மற்றும் பொது பேருந்து தொடர்புடைய விபத்தில் 23 வயது பெண் பயணி ஒருவர் இயற்கை எய்தினார்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று, நண்பருடன் தனது தாயார் வீட்டிற்கு தனியார் வாடகை காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத உச்சம்!
இயற்கை எய்திய லியோங் வெய்னி தாயார் வீட்டிற்கு சென்ற பின்னர் மலேசியா செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
என்ன நடந்தது என்பதை அவரின் நண்பர் வோங் மெய்யி, Shin Min Daily நியூஸிடம் விவரித்தார்.
விபத்தில் வோங் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், லியோங்கிற்கு CPR முதலுதவி செய்ய முயன்றார், ஆனால் அவரது எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
தன் தோழியை சவப்பெட்டியில் பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுததாக வோங் ஷின் மின் நியூஸிடம் தெரிவித்தார்.
இதில் கார் ஓட்டிய 47 வயதான ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தாறுமாறாக சென்ற கார்
ஓட்டுநர் காரை வேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டிச் சென்றதாக வோங் குற்றம் சாட்டினார்.
ஓட்டுநர் திடீரென வண்டியை திருப்பி ஓட்டியதாகவும், அவர் கைகள் நடுங்குவதை பார்த்தபோது ஏதோ தவறாக இருப்பதாக உணர்தேன் என்றும் அவர் கூறினார்.
“அவர் சோர்வாக இருக்கிறார் போல, மேலும் ஷிப்டை விரைவாக முடிக்க அவ்வாறு செய்கிறார் என்று நான் நினைத்தேன், ஆனால் பின்னர் விபத்து நடந்தது,” என்று அவர் சொன்னார்.
ஓட்டுனரின் வேகமே விபத்தை தவிர்க்க முடியாமல் போனதுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணையை விரைவாக முடித்து விபத்துக்கு காரணம் யார் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று லியோங்கின் தந்தை வலியுறுத்தினார்.
பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்… “நிறுத்தத்தில் யாரும் இல்லை” – பயணி-ஓட்டுநர் இடையே வாக்குவாதம்
Photo: Shin Min Daily News
The post பேருந்தில் மோதிய கார்… அம்மாவை பார்க்க சென்றவர் பரிதாப மரணம் – பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டியதாக புகார் appeared first on Tamil Daily Singapore.

