SGD to INR: சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
இன்றைய (ஆக.5) சிங்கப்பூர் பணமாற்று நிலவரப்படி, ஒரு சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.16 ஆகும்.
நேற்றைய (ஆக.4) பணமாற்று நிலவரப்படி, ஒரு சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.67.70 என இருந்தது.

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்த கவலைகள் இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்று வல்லூநர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆக. மாதம் முதல் இந்தியாவிற்கு வரியை கூடுதலாக விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பும் கடந்த 5 மாத காலகட்டத்தில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது.
இந்திய ரூபாய் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற கருத்தும் இருந்து வருகிறது.
நீண்ட கூந்தலுடன், முகமற்ற உருவம்… தெலோக் பிளாங்காவில் நள்ளிரவில் தோன்றிய உருவம் – பதறிய குடும்பம்

