பாசிர் பூத்தே:
ஜாலான் லாமா கூலிமில் உள்ள தொக் பாலி மீன்வள துறைமுகத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
“இன்று பிற்பகல் 1 மணியளவில், அக்குழந்தையை காண்ட பின் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.” என்று மாவட்ட காவல் தலைவர் சூப்பிரிண்டண்ட் ஸைசுல் ரிசால் சகாரியா கூறினார்.
“தொடக்ககட்ட விசாரணைகளில், குழந்தை உயிருடனும், உடல்நலம் கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டது.
குழந்தை உடனடியாக தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, 12 வயதிற்குட்பட்ட குழந்தையை கைவிடுதல் மற்றும் ஆபத்தான முறையில் வெளியே விடுதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பாசிர் பூத்தே மாவட்ட காவல்நிலையத்தை தொடர்புகொள்ளுமாறும், அல்லது 09-7862005 என்ற ஹாட்லைன் எண்ணிற்கு அழைக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




