• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிராஜ் அபாரம்: ஓவல் டெஸ்ட்டில் த்ரில் வெற்றியுடன் தொடரை சமன் செய்தது இந்தியா! | team india thumping win in oval test beats england by 6 runs siraj

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சிராஜ் அபாரம்: ஓவல் டெஸ்ட்டில் த்ரில் வெற்றியுடன் தொடரை சமன் செய்தது இந்தியா! | team india thumping win in oval test beats england by 6 runs siraj
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: இங்கிலாந்து அணி உடனான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் சிராஜ். கடைசி டெஸ்ட் போட்டியை டிரா செய்து, தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது.

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் தேவைப்பட்டது. மழை காரணமாக 4-ம் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியாமல் போனது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ஜேமி ஸ்மித் மற்றும் ஜேமி ஒவ்ர்டன் இருந்தனர்.

5-ம் நாள் ஆட்டத்தின் 2-வது ஓவரை இந்தியா சார்பில் சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் ஸ்மித்தை வெளியேற்றினார் சிராஜ். அதற்கடுத்த தனது ஓவரில் ஜேமி ஓவர்டன்னை எல்பிடபிள்யூ முறையில் சிராஜ் வெளியேற்றினார். மற்றொரு முனையில் இருந்து பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா டங்கை வெளியேற்றினார். தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் பேட் செய்ய வந்தார். காயம் காரணமாக ஒற்றைக் கையில், அதுவும் இடது கையால் மட்டுமே பேட் செய்யும் நிலையில் அவர் இருந்தார்.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்தச் சூழலில் 2-வது இன்னிங்ஸின் 86-வது ஓவரின் முதல் பந்தில் அட்கின்சனை சிராஜ் போல்ட் செய்தார். அதற்கு முன்னதாக சிராஜ் வீசிய முந்தையை ஓவரில் அவர் சிக்ஸர் விளாசி இருந்தார். ஆனால், இந்த ஓவரில் அது முடியாமல் போனது. இந்தப் போட்டியில் 374 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 6 ரன்களில் வெற்றி பெற்றது. மிக அற்புதமாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு சிராஜ் உதவினார்.

இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான 4 விக்கெட்களை வெறும் 8.5 ஓவர்களில் கைப்பற்றி இருந்தனர் பவுலர்கள். ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியின் விடாமுயற்சிக்கு சான்றாக இந்த ஆட்டம் என்றென்றும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிற்கும், நினைவில் இருக்கும்.

முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 5 என மொத்தம் 9 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் சிராஜ் கைப்பற்றினார். இதன் மூலம் லார்ட்ஸில் கைநழுவிய வெற்றியை ஓவலில் சிராஜ் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது. வெற்றிக்குப் பிறகு ஓவல் மைதானத்தை வலம் வந்தனர் இந்திய வீரர்கள். சிராஜ் தனது கைகளில் பந்தை வைத்துக்கொண்டு பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்​நிலை​யில், லண்​டன் கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்​கியது. இந்தப் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 224 ரன்​களும், இங்​கிலாந்து அணி 247 ரன்​களும் எடுத்​தன. 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 396 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 118 ரன்​களும், ஆகாஷ் தீப் 66 ரன்​களும், ரவீந்​திர ஜடேஜா 53 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் 53 ரன்​களும் குவித்​தனர். இங்​கிலாந்து தரப்​பில் ஜோஷ் டங் 5, கஸ் அட்​கின்​சன் 3, ஜேமி ஓவர்​டன் 2 விக்​கெட்​களைச் சாய்த்​தனர். இதைத் தொடர்ந்து 374 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் 2-வது இன்​னிங்ஸை இங்​கிலாந்து விளை​யாடியது.

3-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் இங்​கிலாந்து அணி ஒரு விக்​கெட் இழப்​புக்கு 50 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஸாக் கிராவ்லி 14 ரன்​களில் சிராஜ் பந்​தில் வீழ்ந்​தார். இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 4-ம் நாள் ஆட்​டத்தை பென் டக்​கெட் 34 ரன்​களு​ட​னும், ஆலி போப் 0 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். அபார​மாக விளை​யாடி பென் டக்​கெட் 54 ரன்​கள் எடுத்​திருந்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

கேப்​டன் ஆலி போப் 27 ரன்​கள் எடுத்​திருந்​த​போது சிராஜ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். 106 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் 4-வது விக்​கெட்​டுக்கு ஜோ ரூட்​டும், ஹாரி புரூக்​கும் ஜோடி சேர்ந்து இன்​னிங்ஸை கட்​டமைத்​தனர். உணவு இடைவேளை​யின்​போது இங்​கிலாந்​தின் ஸ்கோர் 3 விக்​கெட் இழப்​புக்கு 164 ரன்​களாக இருந்தது.

ஜோ ரூட் நிதான​மாக விளை​யாட, ஹாரி புரூக் அதிரடி​யாக விளை​யாடி சிக்​ஸர்​களும், பவுண்​டரி​களு​மாக பறக்​க​விட்​டார். இதனால் ஸ்கோர் வெகு​வாக உயர்ந்​தது. அபார​மாக விளை​யாடி ஹாரி புரூக் 91 பந்​துகளில் சதமடித்​தார். அவர் 111 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆகாஷ்தீப் பந்​து​வீச்​சில், சிராஜிடம் பிடி​கொடுத்து வீழ்ந்​தார். 4-வது விக்​கெட்​டுக்கு ஜோ ரூட்​-புரூக் ஜோடி 195 ரன்​கள் சேர்த்​தது.

அதன் பின்​னர் ஜோ ரூட்​டுடன், பெத்​தேல் இணைந்து விளை​யாடத் தொடங்​கி​னார். தேநீர் இடைவேளை​யின்​போது இங்​கிலாந்​தின் ஸ்கோர் 4 விக்​கெட் இழப்​புக்கு 317 ரன்​களாக இருந்​தது. ஜேக்​கப் பெத்​தேல் ஒரு ரன்​னும், ரூட் 98 ரன்​களும் எடுத்​திருந்​தனர். தேநீர் இடைவேளைக்​குப் பின்​னரும் அபார​மாக விளை​யாடிய ரூட் டெஸ்ட் கிரிக்​கெட்​டில் தனது 39-வது சதத்தை விளாசி​னார்.மறு​முனை​யில் இருந்த ஜேக்​கப் பெத்​தேலை 5 ரன்​களில் வீழ்த்​தி​னார் பிரசித் கிருஷ்ணா.

105 ரன்​களில் சிறப்​பாக விளை​யாடிக் கொண்​டிருந்த ரூட்​டை​யும், வெளி​யேற்​றி​னார் பிரசித் கிருஷ்ணா. இதைத் தொடர்ந்து 76 ஓவர்​களில் இங்​கிலாந்து அணி 6 விக்​கெட் இழப்​புக்கு 339 ரன்​கள் எடுத்​திருந்​தது. 4-ம் நாள் ஆட்ட முடிவில் வெற்​றிக்கு 35 ரன்​கள் தேவை என்ற நிலை​யில், ஜேமி ஓவர்​டன் 0 ரன்​னுட​னும், ஜேமி ஸ்மித்​ 2 ரன்​களு​ட​னும்​ களத்தில் இருந்தனர். இந்தச் சூழலில்தான் 5-ம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்களை விரைந்து கைப்பற்றி ஓவல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.



Read More

Previous Post

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

Next Post

வரி விதிப்பு எதிரொலியால் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்: ஏற்றுமதியாளர்கள் கவலை | Tax Tariff; Eggs Exports to the US Halted – Exporters Concerned

Next Post
வரி விதிப்பு எதிரொலியால் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்: ஏற்றுமதியாளர்கள் கவலை | Tax Tariff; Eggs Exports to the US Halted – Exporters Concerned

வரி விதிப்பு எதிரொலியால் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்: ஏற்றுமதியாளர்கள் கவலை | Tax Tariff; Eggs Exports to the US Halted - Exporters Concerned

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin