Last Updated:
ஜோஷ் டங்கின் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா கைப்பற்ற இங்கிலாந்து அணி 357 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற நிலைக்கு சென்றது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சூப்பர் த்ரில்லராக அமைந்த நிலையில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
5 ஆவது டெஸ்ட் போட்டியில் 2 ஆவது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இன்று இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர்.
அப்போது ஜேமி ஸ்மித் 2 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பவுலிங்கில் துருவ் ஜுரெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜேமி ஓவர்டனை எல்பிடபிள்யூ முறையில் சிராஜ் ஆட்டமிழக்க செய்தார்.
ஜோஷ் டங்கின் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா கைப்பற்ற இங்கிலாந்து அணி 357 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற நிலைக்கு சென்றது.
86 ஆவது ஓவர் தொடங்கியபோது இங்கிலாந்து அணி வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை வீசிய சிராஜ் அட்கின்சனை போல்டாக்கி ஆட்டமிழக்க செய்தார். இதைடுத்து இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
August 04, 2025 4:31 PM IST


