பேருந்தை நிறுத்தத் தவறியதாகக் கூறி, டவர் டிரான்சிட் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி தொடர்பான காணொளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசும்பொருளாக மாறியது.
@thesgdaily என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான அந்த காணொளியில், நெட்டிசன்கள் கலவையான கருத்துக்களை கூறியுள்ளனர்.
பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்
இருவரும் வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளும்போது, ஆடவர் அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
ஓட்டுநர் தன்னை பேருந்தில் ஏற்றாமல் சென்றதாகவும், அதை நிறுத்த முயற்சித்த போதிலும் அவர் நிற்காமல் சென்றதாகவும் ஆடவர் குற்றம் சாட்டினார்.
“நான் நீண்ட நேரம் உங்களை நோக்கி ஓடிவந்தேன், மேலும் நீண்ட நேரம் கையால் சைகை செய்தேன்,” என்று கூறிய ஆடவர், தான் பேருந்தின் முன்பகுதியில் இருந்ததாகவும் சொன்னார்.
அவர் சொன்னதை அமைதியாக கேட்ட ஓட்டுநர், சம்பவம் எந்த பேருந்து நிறுத்தத்தில் நடந்தது என்று கேட்டார்.
மேலும், பேருந்து நிறுத்தத்தில் யாரும் இல்லை என்பதையும் ஓட்டுநர் எடுத்துக் கூறினார்.
அதை அடுத்து, பேருந்து அங்கு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பயணி பேச ஆரம்பித்தபோது, ஓட்டுநர் தனது குரலை உயர்த்தி, “முதலில் நான் சொல்வதை கேளுங்கள்! பேருந்து நிறுத்தத்தில் யாரும் இல்லையென்றால், நான் பேருந்தை நிறுத்த மாட்டேன், நான் சென்றுவிடுவேன். அதற்கு இப்போது ஏன் என்னைத் திட்டுகிறீர்கள்?” என்றார்.
அதற்கு, காவல்துறையை அழைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா என்று பயணி கேட்டார்.
வாக்குவாதம் அதிகரித்தபோது, ஆடவர் காணொளி பதிவு செய்வதை ஓட்டுநர் கவனித்தார். மேலும் ஆடவர் கைபேசியை நோக்கி கையை சுழற்றி, “ஏன் புகைப்படம் எடுக்கிறீர்கள்?” என்றும் கேட்டார்.
இணையத்தில் விவாதமாக மாறியது
இந்த காணொளி இணையத்தில் விவாதமாக மாறியது, பல நெட்டிசன்கள் ஓட்டுநருக்கு ஆதரவாக கருத்து கூறினர்.
SBS Transit மற்றும் Go-Ahead சிங்கப்பூரின் அடிக்கடி கேட்கப்படும் வினா விடை பக்கங்களின்படி, பேருந்து நிறுத்தும் இடத்தில் பயணிகள் இருந்தால் மட்டும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பேருந்து நகர்ந்தவுடன், அவர்களின் கவனம் எதிரே வரும் போக்குவரத்தின் மீது திரும்பும், எனவே தாமதமாக வருபவர்களை அவர்கள் கவனிக்காமல் போகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட கூந்தலுடன், முகமற்ற உருவம்… தெலோக் பிளாங்காவில் நள்ளிரவில் தோன்றிய உருவம் – பதறிய குடும்பம்

