Last Updated:
சிராஜ் தவறவிட்ட கேட்ச் இந்தியாவின் வெற்றியை இங்கிலாந்து பக்கம் மாற்றியது. ஹாரி புக் சதம் அடித்து இங்கிலாந்தை வலுவான நிலைக்கு அழைத்தார். இந்தியா 4 விக்கெட் எடுத்து தொடரை சமன் செய்யுமா?
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் ஹாரி புக் கொடுத்த கேட்சை சிராஜ் மிஸ் செய்தது தான் ஓவல் டெஸ்டின் திருப்புமுனையாக மாற்றியுள்ளது.
ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் வெற்றியை நிர்ணயக்கும் ஓவல் டெஸ்ட் இறுதி கட்டத்தில் உள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணி 4 விக்கெட் எடுத்து தொடரை சமன் செய்யுமா அல்லது இங்கிலாந்து 35 ரன்கள் எடுத்து தொடரை கைப்பற்றுமா என்பது இறுதி நாளான இன்று தெரிந்துவிடும். இந்த போட்டிக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது ஜோ ரூட் – ஹாரி புக் பார்ட்னர்ஷிப் தான்.
இங்கிலாந்து 106 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறிய போது இந்த ஜோடி சிறந்த பார்ட்னர்ஷப் அமைத்து அடுத்த விக்கெட்டை 301 ரன்களில் தான் இழந்தது. ஆனால் ஹாரி புக் கொடுத்த எளிதான கேட்சை சிராஜ் தவறவிட்டது தான், இந்தியாவின் பக்கம் இருந்த மேட்சை இங்கிலாந்து பக்கம் அழைத்து சென்றது. இந்த தொடரின் அதிக விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவிற்கு ஹீரோவாக இருந்த சிராஜ் ஒரே ஒரு தவறால் வில்லனாக மாறியுள்ளார்.
இங்கிலாந்து அணி 106 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. கேப்டன் ஓலி போப் வெளியேறியதும் ஹாரி புக் களத்திற்கு வந்தார். ஹாரி புக் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த போது 35 ஆவது ஆகாஷ் தீப் வீசிய பந்தை தூக்கி அடித்தார். பவுண்டரியில் எளிதாக வந்த கேட்சை பிடித்த சிராஜ் சற்று தடுமாறி பவுண்டரி எல்லையை தாண்டி நுழைந்துவிட்டார். இதனால் அது ஹாரிக்கு சிக்ஸராக மாறியது. அப்போது ஹாரி புக் 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
பவுண்டரி எல்லையில் எளிதாக வந்த கேட்சை சிராஜ் தவறவிட்ட பின் ஹாரி புக் சதம் விளாசி இங்கிலாந்தை வலுவான நிலைக்கு அழைத்து சென்றார். சிராஜ் அந்த கேட்சை் பிடித்து இருந்தால் ஓவல் டெஸ்ட் போட்டியின் நிலையே மாறி இருக்கும். ஓவல் டெஸ்ட் போட்டியிலன் இறுதி நாளான இன்று இந்தியா வெற்றி 4 விக்கெட்கள் தேவைப்படும் நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்கள் என்ற சூழல் உள்ளது.
August 04, 2025 9:47 AM IST


