Last Updated:
தென்னாப்பிரிக்க அணியின் ஜேகஸ் கல்லீஸ், இலங்கையின் மகேலா ஜெயவர்த்தனே ஆகியோர் உள்ளூரில் நடந்த போட்டிகளில் 23 சதங்கள் விளாசியுள்ளனர்.
உள்ளூர் மேட்ச்களில் அதிக சதம் அடித்தவர்கள் லிஸ்டில் ரிக்கி பான்டிங், ஜேகஸ் கல்லீஸ் ரிக்கார்டை முறியடித்து ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ருட் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடும் இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்திருந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லே 14 ரன்களிலும், ஆலி போப் 27 ரன்களிலும், பென் டக்கெட் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 106 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின்னர் இணைந்த ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. குறிப்பாக ஹாரி ப்ரூக் ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடி சதம் அடித்தார். 98 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர் 14 பவுண்டரியுடன் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 137 பந்துகளில் 12 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.
தற்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும் 35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும். இந்தியா வெற்றிபெற இன்னும் 4 விக்கெட்டுகள் தேவை.
இது இங்கிலாந்திற்குள் அவர் அடிக்கும் 24 ஆவது சதமாகும். இந்த வரிசையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங், தென்னாப்பிரிக்க அணியின் ஜேகஸ் கல்லீஸ், இலங்கையின் மகேலா ஜெயவர்த்தனே ஆகியோர் உள்ளூரில் நடந்த போட்டிகளில் 23 சதங்கள் விளாசியுள்ளனர்.
August 03, 2025 10:09 PM IST


