Last Updated:
76.2 ஓவர்களில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
வெற்றிபெற இன்னும் 35 ரன்கள் தேவைப்படும் நிலையில் ரன்கள் சேர்க்க இங்கிலாந்து தடுமாறி வருவதால் இந்திய அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
5 ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லே 14 ரன்களிலும், ஆலி போப் 27 ரன்களிலும், பென் டக்கெட் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 106 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின்னர் இணைந்த ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. குறிப்பாக ஹாரி ப்ரூக் ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடி சதம் அடித்தார். 98 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர் 14 பவுண்டரியுடன் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 137 பந்துகளில் 12 பவுண்டரியுடன் சதம் அடித்தார். 105 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் கீப்பர் துருவ் ஜுரெலிடம் கேட்ச் கொடுத்து ரூட் ஆட்டமிழந்தார்.
August 03, 2025 10:21 PM IST


