Last Updated:
ஹாரி ப்ரூக் ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடி சதம் அடித்தார். 98 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர் 14 பவுண்டரியுடன் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ருட் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளார்.
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடும் இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்திருந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லே 14 ரன்களிலும், ஆலி போப் 27 ரன்களிலும், பென் டக்கெட் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 106 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின்னர் இணைந்த ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. குறிப்பாக ஹாரி ப்ரூக் ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடி சதம் அடித்தார். 98 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர் 14 பவுண்டரியுடன் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
August 03, 2025 9:21 PM IST


