யாழ் – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும்
மனைவியும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 90
மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம்
காவல் நிலைய போதை தடுப்பு பிரிவினால் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை
கைது செய்யப்பட்ட இருவரும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள்
இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர்
மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா

