• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹாரில் சொந்த வீடு இருக்கும்போது, தமிழகத்தில் எப்படி வாக்காளராக முடியும்? – ப.சிதம்பரம் கேள்வி | How can become a voter in Tamil Nadu when have own house in Bihar P Chidambaram questions

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹாரில் சொந்த வீடு இருக்கும்போது, தமிழகத்தில் எப்படி வாக்காளராக முடியும்? – ப.சிதம்பரம் கேள்வி | How can become a voter in Tamil Nadu when have own house in Bihar P Chidambaram questions
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ‘பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ பிஹாரின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் திகைப்பூட்டுவதாக மாறி வருகிறது.

பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானது. ‘நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்’ என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும். மேலும், தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் பெரிய அளவில் தலையிடும் செயலாகும்.

வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி பிஹார் அல்லது அவரது சொந்த மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க ஏன் திரும்பி செல்லக்கூடாது?. சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளி பிஹாருக்குத் செல்லவில்லையா?.

வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பிஹாரில் அல்லது வேறு மாநிலத்தில் அத்தகைய வீடு உள்ளது. அவர் எப்படி தமிழ்நாட்டில் வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?.

புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர்ந்த தொழிலாளி தமிழ்நாட்டிற்கு “நிரந்தரமாக குடியேறியவர்” என்று எப்படி கருத முடியும்.

இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தின் மூலம் துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும்” என்று கூறினார்.



Read More

Previous Post

ஈரான் வான்வெளி முழுமையாக மீள்திறப்பு – ஐபிசி தமிழ்

Next Post

Dhoni | “அடுத்த 5 ஆண்டுகள் விளையாடுவதற்கு மருத்துவர்கள் சான்று” – ஓய்வு பற்றி தோனி சூசகம்! | விளையாட்டு

Next Post
Dhoni | “அடுத்த 5 ஆண்டுகள் விளையாடுவதற்கு மருத்துவர்கள் சான்று” – ஓய்வு பற்றி தோனி சூசகம்! | விளையாட்டு

Dhoni | "அடுத்த 5 ஆண்டுகள் விளையாடுவதற்கு மருத்துவர்கள் சான்று" - ஓய்வு பற்றி தோனி சூசகம்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin