தெலோக் பிளாங்காவில் உள்ள கட்டிடத்தில் நீண்ட கூந்தலுடன் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு முகமற்ற உருவத்தை குடும்பம் ஒன்று கண்டது.
நள்ளிரவு நேரத்தில் அந்த கட்டிடத்தின் ஜன்னலில், வெள்ளை நிறத்தில் முகமற்ற உருவம் மெதுவாக அசைந்து கொண்டிருந்ததாக அந்த குடும்பம் கூறியது.
சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய செயல்முறை: பயணத் தடையும் விதிக்கப்படலாம்!
நீண்ட கூந்தலுடன், முகமற்ற உருவம்
@sgfollowsall என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இது தொடர்பான பதிவு நம் கண்ணில் பட்டது.
அதில் அந்த குடும்பத்தினர் கிராப் வண்டிக்காக காத்திருந்தபோது, அருகில் இருந்த கட்டிடத்தின் ஜன்னல் வழியாக அந்த வினோதமான உருவத்தைக் கவனித்தனர்.

உடனே அவர்கள் அதை புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது, அதில் நீண்ட கருமையான கூந்தலுடன் கூடிய வெள்ளை நிற நிழல் போன்ற உருவம் தெரிகிறது.
அந்த உருவம் பக்கவாட்டில் அசைந்துகொண்டே அதன் தலைமுடியை மெதுவாக வருடுவது போல் தோன்றியதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்குத் தெளிவான முகம் இல்லை என்பதுதான் அவர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
“அது பொம்மையா, கலை உருவமா அல்லது வேறு ஏதாவதா என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்றும், “ஆனால் அது நிச்சயமாக எங்களை பயமுறுத்தியது” என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் சோதனை: தகாத சேவை.. சந்தேக நபர்கள் 28 பேர் கைது
குடும்பத்தினரிடம் ‘சீக்கிரம் கிளம்புங்கள்’ என்று கூறிய கிராப் ஓட்டுநர்
கிராப் ஓட்டுநரின் வார்த்தை அவர்களை மேலும் அச்சத்தில் உறைய வைத்தது.
அங்கு வந்த ஓட்டுநர் அந்த உருவத்தைப் பார்த்து, விரைவாக அங்கிருந்து புறப்பட சொன்னார், மேலும் “தெலோக் பிளாங்காவில் பேய் சுற்றித் திரிவதாக கதைகள்” இருப்பதாக அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், குடும்பத்தினர் உடனடியாக காரில் ஏறிச் சென்றனர், ஆனால் அவர்களுக்கு குழப்பம் இருந்துகொண்டே இருந்தது.
எனவே, பேய் கதை பற்றி அந்தப் பகுதி மக்களுக்கு தெரியுமா அல்லது அந்த உருவத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்று அவர் அந்த பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.
நெட்டிசன்கள் கருத்து
இந்த சம்பவம், நெட்டிசன்கள் மத்தியில் பல ஊகங்களைத் தூண்டியது. அதாவது இது வழிவழியாக வரும் உள்ளூர் நம்பிக்கை கதைகளுடன் தொடர்புடையதா அல்லது வெறுமனே prank குறும்பா என்று பலர் யோசித்து கருத்து தெரிவித்தனர்.
சிலர் அது வெறுமனே ஒரு பொம்மை அல்லது ஏதாவது “மேஜை துணி” என்று கருத்து கூறினர்.

இருப்பினும் இன்னும் உறுதியான தெளிவான பதில்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்தப் பகுதியில் உள்ள ஏதேனும் கடைகள் அல்லது ஸ்டுடியோக்கள் இந்த உருவத்தை பற்றி விளக்க முடியுமா என்று அந்த பதிவில் கேட்கப்பட்டது.
அந்த பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் யாரேனும், இது போன்ற சம்பவத்தை கண்டதுண்டா? அல்லது கதைகள் ஏதும் தெரியுமா அப்படி தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.
தமிழ் ஊழியர்கள் 7 பேரும் இஸ்தானாவுக்கு செல்வது உறுதி: அதிபருடன் உரையாட வாய்ப்பு!
Photo: @sgfollowsall on Instagram

