Last Updated:
ஆகஸ்ட் 7–18 காலகட்டத்தில் டெல்லி–மும்பை டிக்கெட்டுகள் வழக்கமாக ரூ.4,000–5,500 வரை இருக்கும் டிக்கெட்டுகள் விலை ரூ.6,500–8,000 ஆக உயர்ந்துள்ளது
ஆகஸ்ட் மாத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை 80 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் டிக்கெட்டுகளைப் போன்று விமான டிக்கெட்டுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. பண்டிகைகள் மற்றும் சீசன்களை பொருத்து விமான டிக்கெட்டுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
இவ்வாறு செய்வதன் மூலமே விமான போக்குவரத்தினை இழப்பு இல்லாமல் இயக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் மாத்தில் பண்டிகைகள் அதிகமாக உள்ள சூழலில் விமான டிக்கெட்டுகளின் விலை 80 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இம்மாத நடுப்ப்குதியில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின விடுமுறைகள் வருகின்றன. இதனை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு பலரும் தயாராகி வருகிறார்கள். இதனால் 3 ஆவது வாரத்தில் விமான போக்குவரத்து துறை மிகவும் பிஸியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன்மாஷ்டமி நெருங்கி வரும் சூழலில், விமானக் கட்டணங்கள் உயர்வை சந்தித்துள்ளன. சில முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் டிக்கெட் விலைகள் 80% வரையிலும், பிரபலமான சர்வதேச பயணங்களில் 50–65% வரையிலும் உயர்ந்துள்ளன.
August 02, 2025 8:29 PM IST


