Last Updated:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்ட பின்னர் வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்க உள்ளது
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் ட்ராபி என்ற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் அதிகப்படியான வேலை பளு காரணமாக ஜஸ்பிரித் பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
இதன் பின்னர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்ட பின்னர் வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்க உள்ளது. அதன் பின்னர் இரண்டாவது போட்டி அக்டோபர் 10ஆம் தேதி ஆரம்பமாகிறது.
August 02, 2025 4:21 PM IST


