(எம்.எஸ்.மணியம்)
பந்திங், ஏப்.
தடகள போட்டிகளில் சாதனை படைத்ததற்காக ஃபிட்மா வெட்ரன் கிளப்பின் தடகள வீரர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டது.
அண்மையில் கோலசிலாங்கூர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோலசிலாங்கூர் பொது அரங்கில் நடைபெற்றது. இதில் ஃபிட்மா வெட்ரன் குழுவின் 16 மாஸ்டர் உறுப்பினர்கள் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதாக ஃபிட்மா வெட்ரன் குழுவின் தலைவர் எம்.முருகன் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான அனுபவப் பிரிவு என்ற ஒரே ஒரு பிரிவில் மட்டுமே பங்கு பெற்றனர்.
பதக்கம் வென்ற அனைவருக்கும் ரொக்க ஊக்கத்தொகை, அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஃபிட்மா வீரர்களுக்கு தற்போது உலக தடகள பயிற்சியாளர்கள் கல்விச் சான்றிதழ் பெற்ற ஒரு தகுதி வாய்ந்த பயிற்சியாளரான எம்.எஸ்.அமுதா ஆறுமுகம் பயிற்சி வழங்கி வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக வரும் ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஃபிட்மா கிளப் உறுப்பினர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கோலசிலாங்கூர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஃபிட்மா கிளப் 6 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது என்று எம்.முருகன் தெரிவித்தார். மேலும் குழுவின் இரு உறுப்பினர்களான சுரேஷ் குமார், முருகப் பெருமாள் தலா இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.
பதக்கம் வென்றவர்கள் பின்வருமாறு:
தங்கப் பதக்கங்கள் வென்றவர்கள்
- சுரேஷ்குமார்- 5 கிமீ நடை 7 கிமீ நடை
- முருகன்பெருமாள்- 100– 200–
- என்.குணசேகரன்- ஷாட்புட்
- தமிழ்செல்வன்- 5 கிமீஓட்டம்
வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்
- ஜாஸ்வோங்- 1500– 5ஓ– ஓட்டம்
- தமிழ்செல்வன்- 400–
வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்
- இளங்கோவன்5 கிமீநடை
- ஜாஸ்வோங்- உயரம் தாண்டுதல்
- சுந்தரராஜு- 400 எம்
- குணசேகரன்- 200 எம்
இவர்கள் பயிற்சியாளர் அமுதா ஆறுமுகத்தின் கீழ் கழகம் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் ஜூலை 2024 இல் திட்டமிடப்பட்டுள்ள சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பிற்கும் 2024 அக்டோபரில் திட்டமிடப்பட்ட மலேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பிற்கும் தயாராவதற்காக அனைத்துப் பயிற்சிகளும் ஒவ்வொரு சனிக்கிழமை காலை ஷா ஆலமிலுள்ள மட்சுஷிதா ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.




