அல்லாஹ்வை நெருங்கிடும் அருள் மிகு மாதம்.
புனித ரமழான் மாதம் பிறந் திட்டாலே
இம் மண்ணில் வாழும் மனித ரெல்லாம்
கண்ணியப் படுத்திடும் சிறப்பு மிகு மாதம்
தெரிந்து செய்த பெரும் பாவம் நீங்க
தெரியாமற் செய்த சிறு பாவங் கழிய
அல்லாஹ் விடம் இரு கரம் ஏந்தியே
பாவக் கறைகள் அகற்றிடும் அற்புத மாதம்.
இறுதி பத்தில் ஒரு நாள் இரவினிலே
பாக்கியத்தை யார் அடைந்து கொள்வானோ
அல்லாஹ்வின் நேசர்களாய் சுவர்க்கத்தின்
வாசற்படியேறி மனிதகுலப் பெருமை காப்பான்.
இம்மையிலும் நறுமணக் காற்று வீசிட
நற்குணம் நிறைந்த பண்புகள் மலர்ந்திடும்
உத்தமராரெலாம் கண் குளிர கண்டிடலாம்
சாந்தி சகவாழ்வு நற்பேறு தந்திடுமாம்.
இக்பால் அலி…
The post இனிய நோன்புப் பெருநாள் appeared first on Thinakaran.

