Last Updated:
உலகக் கோப்பை செஸ் இறுதியில் ஹம்பி மற்றும் திவ்யா டிரா செய்ததால், டை பிரேக்கர் சுற்றில் யார் சாம்பியன் ஆகப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இரண்டாவது சுற்றையும் இந்திய வீராங்கனைகள் ஹம்பி – திவ்யா டிரா செய்ததால், டை பிரேக்கர் சுற்றில் மகுடம் சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இரு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி – திவ்யா தேஷ்முக் மோதினர். அதன்படி, சனிக்கிழமை நடந்த முதல் சுற்று சுமார் நான்கு மணி நேரம் நீடித்த நிலையில் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பியுடன் டிரா செய்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் ஹம்பி – திவ்யா மீண்டும் மோதினர். இந்த சுற்றும் சமனில் முடிந்ததால், ஆட்டம் டை பிரேக்கர் சுற்றுக்குச் சென்றுள்ளது. இதனால், வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று சாம்பியன் மகுடத்தை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
July 28, 2025 7:49 AM IST


