• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுவதற்கு கிளம்பும் எதிர்ப்பு

GenevaTimes by GenevaTimes
July 27, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுவதற்கு கிளம்பும் எதிர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 27, 2025 9:33 PM IST

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன

ஃபைல் ஃபோட்டோஃபைல் ஃபோட்டோ
ஃபைல் ஃபோட்டோ

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுவதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில், ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா – பகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் உறுப்பினருமான முகமது அசாருதீன், இரு தரப்பு போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடாத பட்சத்தில் சர்வதேசப் போட்டிகளில் மட்டும் ஏன் இருநாடுகளும் மோத வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, மாநிலங்களவை எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் பாகிஸ்தான் விவகாரத்தில் பிசிசிஐ மற்றும் பாஜக இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை பிசிசிஐ மவுனம் காத்து வருகிறது. முன்னதாக உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தை இந்திய சீனியர் வீரர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.

8 நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று போட்டி தொடர் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற்றம் அடையும்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 27, 2025 9:33 PM IST

Read More

Previous Post

அகமதாபாத் பொறியாளர் உருவாக்கிய ட்ரோன்… ஆர்டர் செய்த ராணுவம்…! அப்படி என்ன ஸ்பெஷல்…?

Next Post

AI வருகையின் தாக்கம்: 12,200 IT ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் TATA குழுமம் | Makkal Osai

Next Post
AI வருகையின் தாக்கம்: 12,200 IT ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் TATA குழுமம் | Makkal Osai

AI வருகையின் தாக்கம்: 12,200 IT ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் TATA குழுமம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin