Last Updated:
இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடினால் மட்டுமே இந்தப் போட்டியை டிரா செய்ய முடியும்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட முன்னிலை பெறத் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக பேட்ஸ்மேன்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 3 மேட்ச் முடிந்த நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மேட்சில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்து இந்தியாவை விடவும் 311 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதன்பின்னர் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியபோது ரன் ஏதும் எடுக்காமலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் என 2 முக்கிய விக்கெட்டுகளைப் பறி கொடுத்தது. இதற்குப் பின்னர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.
இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கே.எல். ராகுல் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் 103 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் இணைந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தது.
July 27, 2025 8:23 PM IST


