அவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெற்றபோது, 26 வயதான பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியதும் அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
மயக்க நிலையில் மருத்துவமனைக்கு சென்றபோது, ஓடும் ஆம்புலன்சிலேயே அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்த இளம் பெண், புத்த கயா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆம்புலன்சில் மூன்று, நான்கு பேர் இருந்ததாகவும், அவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். அந்த நேரம் சரியாக சுயநினைவு இல்லாததால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் அழுது புலம்பியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், உடனடியாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. விசாரணையில், ஆம்புலன்ஸ் சென்ற வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் தாமதமாக சென்றது உறுதி செய்யப்பட்டது.
அடுத்த சில மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் மருத்துவ உதவியாளர் அஜித் குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊர்க்காவல் படைக்கான உடல் தகுதித் தேர்வின் போது மயங்கி விழுந்த இளம் பெண்ணை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, ஆம்புலன்சில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஊர்க்காவல் படையில் சேர்ந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற வேட்கையில் தகுதித் தேர்வில் கலந்துகொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, பீகாரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
July 26, 2025 7:24 PM IST

