Last Updated:
யாஷ் தயல் மீது ஜெய்பூர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயல் மீது ஜெய்பூர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான கிரிக்கெட் வீரர் யாஷ் தயல் மீது பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு முறை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜெய்பூர் சங்கானேர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் தனக்கு 17 வயதாக இருந்தபோது யாஷ் தயல் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அத்துடன் நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் போதும் சிதாப்பூரா உள்ள தனியார் ஹோட்டலில் மீண்டும் பாலியல் துன்புறுத்தியதாகவும் குற்றாம் சாட்டியுள்ளார்.
இதனை விசாரித்த ஜெய்பூரின் காவல் அதிகாரிகள் போக்சோ வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே காசியாபாத்தில் பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் இதுவரை யாஷ் தயல் எந்த விளக்கமும் தெரிவிக்காதது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. 18 வருடங்களுக்கு பிறகு ஆர்சிபி கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த யாஷ் தயல் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
July 25, 2025 6:59 PM IST


