Last Updated:
ரிஷப் பந்த் இங்கிலாந்தில் 479 ரன்கள் எடுத்து, 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தார். காயத்திலிருந்து மீண்டு அரைசதம் அடித்தார். 5 முறை 50 ரன்களை கடந்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது மேஜிக்கல் பேட்டிங்கின் மூலம் பல சாதனைகளை படைத்து வருகிறார். மான்செஸ்டரில் 54 ரன்கள் அடித்த ரிஷப் பந்த் இங்கிலாந்தில் இமாலய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
மான்செஸ்டர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இருந்து அவர் மீண்டு வர சில வாரங்கள் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் காயம் காரணமாக வெளியேறிய ரிஷப் பந்த் மீண்டும் மைதானத்திற்கு வந்து அரைசதம் அடித்து வியப்படைய வைத்தார். ரிஷப் பந்த் 54 ரன்கள் அடித்து இந்திய அணியை 354 ரன்கள் பெற செய்தார். இந்த தொடரில் மட்டும் ரிஷப் பந்த் இதுவரை 479 ரன்கள் விளாசி உள்ளார்.
இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் போட்டி 1880 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 முதல் 8 வரை தி ஓவலில் நடைபெற்றது, மேலும் முதல் டெஸ்ட் தொடர் 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்றது. ஆனால் 141 ஆண்டுகளில் இங்கிலாந்தில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 479 ரன்கள் எடுத்த முதல் விக்கெட் கீப்பர்-பேட்டர் பந்த் தான். இதற்கு முன் இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டுவர்ட் 1998 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 465 ரன்கள் எடுத்ததே விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிக ரன்கள் அடித்த சாதனையும் பந்த் முறியடித்துள்ளார். முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 40 போட்டிகளில் 2716 ரன்கள் அடித்து இருந்தார். அதனை ரிஷப் பந்த் 38 டெஸட் போட்டிகளில் முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக மற்றொரு சாதனையும் ரிஷப் பந்த் தகர்த்துள்ளார். அதாவது ஒரே டெஸ்ட் தொடரில் அதிக முறை 50 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4 முறை 50-க்கும் அதிகமான ரன்களை கடந்துள்ளார். ஆனால் ரிஷப் பந்த் தற்போது நடைபெற்று தொடரில் 5 முறை 50-க்கும் அதிகமான ரன்களை கடந்துள்ளார். பரோக் எஞ்சினியர் இந்த பட்டியலில் உள்ளார். அவர் ஒரே டெஸட் தொடரில் 4 முறை 50 ரன்களை கடந்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜோரல் மாற்று வீரராக களத்தில் உள்ளார். இராண்டவது இன்னிங்சில் தேவைப்பட்டால் ரிஷப் பந்த் பேட்டிங் செய்ய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
July 25, 2025 4:07 PM IST


