• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நடுங்க வைக்கும் செம்மணி: புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் – கனடா கடும் கண்டனம்

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நடுங்க வைக்கும் செம்மணி: புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் – கனடா கடும் கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை (Srilanka) உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல் போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை செம்மணி மனிதப் புதைகுழி நிரூபித்துள்ளது என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என பியர் பொய்லியர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பு ஜூலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் பாரம்பரியத்தைக் கொண்ட கனேடியர்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருவதற்கு தயாராகும் இவ்வேளையில் நாங்கள் மீண்டுமொரு முறை இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற பாரம்பரியத்தை எதிர்கொண்டுள்ளோம்.

நடுங்க வைக்கும் செம்மணி: புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் - கனடா கடும் கண்டனம் | Canada Conservative Party Leader Abt Sl Genocide

இலங்கையில் செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுகள் ஆரம்பமாகி
இந்த வாரத்துடன் ஒரு வாரமாகின்றன. 


இந்த மனித புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள் எனக் கருதப்படும்
உடல்கள் உட்பட தமிழர்களின் பெருமளவு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து
விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன.

வழமையான கட்டுமானபணியாக ஆரம்பித்தது – நடுங்க வைக்கும்
கண்டுபிடிப்பாக மாறியது – தொழிலாளர்கள் நிலத்துக்கடியில் மனித உடல்களை கண்டுபிடித்தனர்.

கண்கள் கட்டப்பட்டு கொலை

நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தற்போது ஆழமற்ற மனித புதைகுழிகள் கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள், சிறுவர்கள்
தனிப்பட்ட ரீதியில் எதிர்கொண்ட பாதிப்புகள் – விளையாட்டுப் பொருட்கள், புத்தக பைகள் ஆடைகள்  தெரியவந்துள்ளன.

நடுங்க வைக்கும் செம்மணி: புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் - கனடா கடும் கண்டனம் | Canada Conservative Party Leader Abt Sl Genocide

ஈவிரக்கமற்ற தன்மை ஆழம் காண முடியாதது.
தமிழ் கனேடியர்கள் தங்கள் இதயங்களில் பல தசாப்தங்களாக
அறிந்திருந்த விடயங்களை – அதாவது இலங்கையின் உள்நாட்டு
போரின் போது தங்களின் உறவுகள் காணாமல் போவது தற்செயலாக
இடம்பெற்றது இல்லை என்பதை – செம்மணி மனித புதைகுழி நிரூபித்துள்ளது.

அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் – மௌனமாக்கப்பட்டார்கள் – இரகசியமாக புதைக்கப்பட்டார்கள்.

உயிர்தப்பியவர்களிற்கு உறுதியான ஆதரவை வழங்க வேண்டிய பாரிய அநீதிகள் எங்கு இடம்பெற்றாலும்  நீதிக்கான தேடலில் உறுதியாக இருக்க வேண்டிய தார்மீக பொறுப்பு கனடாவிற்குள்ளது.

மிக நீண்டகாலமாக இந்த சுமையை சுமக்கும் இங்குள்ள மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய
பொறுப்பு உள்ளது என்றுள்ளது.

Read More

Previous Post

RM100 ரொக்க உதவி, RON95 விலை குறைவு ஆகியவை தேர்தல் பரிசுகள் அல்ல என்கிறார் பிரதமரின் அரசியல் செயலாளர் | Makkal Osai

Next Post

கமல்ஹாசன், உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பிக்கள் இன்று பதவியேற்பு..!

Next Post
கமல்ஹாசன், உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பிக்கள் இன்று பதவியேற்பு..!

கமல்ஹாசன், உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பிக்கள் இன்று பதவியேற்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin