• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘அரங்கம் அதிரட்டுமே’ காலில் காயத்துடன் களமிறங்கிய ரிஷப் பந்த் – ரசிகர்கள் உற்சாக கோஷம்

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘அரங்கம் அதிரட்டுமே’ காலில் காயத்துடன் களமிறங்கிய ரிஷப் பந்த் – ரசிகர்கள் உற்சாக கோஷம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 24, 2025 6:08 PM IST

காலில் காயத்துடன் களமிறங்கிய ரிஷப் பந்த் ரசிகர்களின் உற்சாக கோஷத்துடன் வரவேற்கப்பட்டார். இந்தியா 321/6 என்ற நிலையில் மழை காரணமாக உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

காலில் காயத்துடன் களமிறங்கிய ரிஷப் பந்த்காலில் காயத்துடன் களமிறங்கிய ரிஷப் பந்த்
காலில் காயத்துடன் களமிறங்கிய ரிஷப் பந்த்

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் ரிஷப் பந்த் மைதானத்தில் ஆட வந்த போது ரசிகர்கள் உற்சாக கோஷமிட்டனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 264 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

சாய் சுதர்சன் 61 ரன்கள் மற்றும் யாஷ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்து இருந்தனர். இந்த டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பந்த்த ரிவர்ஸ் ஷாட் முயன்ற போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மைதானத்தை விட்டு நடந்து செல்ல முடியாமல் அவர் 4 சக்கர வாகனம் மூலமாக பெவிலியன் திரும்பினார். காயம் காரணமாக ரிஷப் பந்த் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று எதிர்பாரக்கப்பட்டது.

ஆனால் இந்திய அணி 314 ரன்களில் 6 விக்கெட்டை இழந்து இருந்தது. வாஷிங்டன் சுந்தர் களத்தில் இருந்த போது அடுத்த வீரராக யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரிஷப் பந்த் களமிறங்கினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தாங்கி, தாங்கி மைதானத்தில் நடந்து வந்தார். காயமாக இருந்தாலும் ரிஷப் பந்த் மைதானத்தில் களமிறங்கிய போது அங்கிருந்த ரசிகர்கள் உற்சாக கோஷமிட்டு அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

காயம் காரணமாக ரிஷப் பந்த் பொறுமையாக ஓடி ரன்களை சேர்த்தார். இந்திய அணி 321 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவேளை முடிந்து மழை குறுக்கீடு இல்லாமல் இருந்தால் போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே தொடரை தக்கவைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 24, 2025 5:39 PM IST

Read More

Previous Post

கீழடி அறிக்கை நிலை என்ன? – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம் | Central Minister Explain about Keezhadi Statement at Parliament

Next Post

அதிக EMI-களில் பிளாட்களை வாங்குவது ஏன் புத்திசாலித்தனமாக இருக்காது..?

Next Post
அதிக EMI-களில் பிளாட்களை வாங்குவது ஏன் புத்திசாலித்தனமாக இருக்காது..?

அதிக EMI-களில் பிளாட்களை வாங்குவது ஏன் புத்திசாலித்தனமாக இருக்காது..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin